முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

  கொரானாவும் மீனவர்களும்; தொலைந்து போன முகமற்றவர்களின் கதை! ஊரடங்கு அறிவிக்கப்பட்டு சில நாட்கள் கழித்து யாரையான் சோமேஷ் (வயது 18) என்ற ஆந்திராவைச் சேர்ந்த மீனவ இளைஞர், எந்திர படகு மூலம் மீன்பிடிக்கச் சென்றபோது குஜராத்தின் வெரவாலின் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலில் மாட்டிக்கொண்டான். அவர் சென்ற கலத்திலிருந்ததோ (படகு) 500 லிட்டர் தண்ணீர்தான். அது அவருக்கு அவருடைய முதலாளியினால் நாளொன்று 8 லிட்டர் தண்ணீர்தான் அளிக்கப்பட்டிருந்தது. அவருடன் மற்ற மீனவர்கள் 50பேர் கலத்தில் இருந்தனர். ஒரு நாள் முழுவதும் அவருடைய அனைத்து தேவைகளுக்கும் அந்த 8 லிட்டர் தண்ணீரைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். உணவும், முதலாளி அளிக்கும் குறிப்பிட்ட அளவு அரிசிதான் சேமிப்பாக இருந்தது. சோமேஷ் போன்று ஏறத்தாழ பல்வேறு கடற்கரை மாநிலங்களைச் சேர்ந்த 15,000 மீனவத் தொழிலாளர்கள் ஊரடங்குக்கு முன்னதாக மீன்பிடிக்கச் சென்றவர்கள் நடுக்கடலில் மாட்டிக்கொண்டு தத்தளிப்பதாக மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன. இவர்களுக்குக் குடிக்க மட்டுமே தண்ணீர் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தொலைக்காட்சிகள், பத...
சமீபத்திய இடுகைகள்
  ஆனந்த விகடனுக்கு இதுவும் கிளுகிளுப்புதான்! by   Prakash விகடன் குழுமம் ஒரே நாளில் தனது பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 176 பேரை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அந்த 176 பேரும் வரும் அடுத்த மாதம் (ஜூன்) வேலையிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று வாய்வழியாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தாங்களாகவே வேலையை விட்டு விலகுவதாக எழுதித்தர வேண்டும் என்று மிரட்டல் பாணியில் கூறியுள்ளது. இந்த செய்தி வைரலாக, சமூக ஊடகங்களில் பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதன் எதிர்வினையாக விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் ஒரு சிலர் மட்டுமே தங்களது கோபத்தைத் தெரிவித்துள்ளனர். ஆனால், சிலரோ நம்ம விகடனிலா இது நடந்ததுள்ளது என்று வேதனைப்பட்டுள்ளனர். விகடனின் குரூர முகம் தெரியாததால் ஏற்படும் அனுதாபம்  மட்டுமல்ல இது பத்திரிகைகள், பத்திரிகையாளர்களின் குறித்து பிரமைகளின் வெளிப்பாடே இது. விகடனில் பணி புரிந்த முன்னாள் ஆசிரியர் கம்பெனியில் நஷ்டம் என்ன செய்வது என்று புலம்பியிருந்தார். ஒரு பெரிய நிறுவனம் வெறும் 40 நாட்கள் கொரோனா ஊரடங்கினால் (அதன் பத்திரிகைகள் ...
நதிகள் இணைப்பு: மறக்கக் கூடாத பாடம்! சேது ராமலிங்கம் நதிகள் வீணாகக் கடலில் போய் கலக்கின்றன. அதை திருப்பி ஒன்றாக இணைத்து வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதுதான் நதிகள் இணைப்புத் திட்டம். அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் நாடு வளம் கொழிக்கும் வல்லரசாகிவிடும் என்று நமது நாட்டில் நீண்ட நெடுங்காலமாக நம்பப்பட்டுவரும் மூடநம்பிக்கை. இது ஆட்சியாளர்களினாலும் சில அமைப்புகளினாலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதை ஏன் ஓர் அறிவியல்பூர்வமற்ற கற்பனைத் திட்டம் என்று கூறுகிறோம்? இயற்கையின் இயக்க விதி நதிகள் கடலில் சேருவது இயற்கையின் இயக்க விதி. ஏனெனில், அதுவே அறிவியல்பூர்வமான நடவடிக்கையும் ஆகும். ஆதிகாலத்தில் கடல் உருவானபோது அது நன்னீராகவே இருந்தது. நதிகள் மணலையும் சிறு கற்களையும் கனிமவளங்களையும் உருட்டிக்கொண்டு சேர்த்தன. அதன் பிறகு கடல் நீர் இன்றுள்ளதுபோல உப்புத்தன்மை கொண்டதாக மாறியது. கடல் நீரில் 63 விழுக்காடு நன்னீர், 33 விழுக்காடு உப்பு, 2 விழுக்காடு கனிமவளங்கள் உள்ளன என்று தோராயமாக கடலியல் அறிவியலாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. கடலில் மீன்வளத்துக்கும் தாவரவா...
நதிகளின் தற்கொலை! சேது ராமலிங்கம் தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டுள்ளது. சென்னைக்குக் குடிநீர் ரயிலில் ஜோலார்பேட்டையிலிருந்து கொண்டுவரும் அளவுக்கு அவலநிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பஞ்சமும் பற்றாக்குறையும் ஏற்பட்டதற்கு யார் காரணம், ஏன் தண்ணீர் மேலாண்மையை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படைக் கேள்விகளுக்குப் போகாமல் வேறொரு பிரச்சினையானது தீர்வாக வைக்கப்படுகிறது கடலில் கலக்கும் நதிகளை இணைப்பது, கங்கை காவிரி இணைப்புத் திட்டம், கோதாவரி இணைப்புத் திட்டம் எனத் திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. நதிகளின் மரணம் நதிகள் இணைப்பு ஒன்றுதான் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என வலியுறுத்தப்படுகிறது. ஆனால், நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லாதது என்று கூறி பல நேரங்களில் மத்திய நீர் ஆணையத்தினால் (Central Water Commission) நிராகரிக்கப்பட்டுள்ளது. தண்ணீர்த் துறை சார்ந்த நிபுணர்களால் இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நதிகளின் தற்கொலைக்குச் சமமானது என்றும் கருத்து கூறியுள்ளனர். மேலிருந்து கீழ் நோக்கிப் பாயும் நதிகளின் நீரோட்டத்தை மேல் நோக்கித் திருப்ப...
மார்க்சிஸ்ட்டுகளின் படுதோல்விக்குக் காரணம் என்ன? மார்க்சிஸ்ட்டுகளின் படுதோல்விக்குக் காரணம் என்ன? சேது ராமலிங்கம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி அதிர்ச்சியூட்டும் வகையில் தோல்வியடைந்துள்ளது. நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி மூன்று இடங்களிலும் சிபிஐ இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி 40 இடங்களில் டொபாசிட் இழந்துள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கட்சி சுய பரிசீலனை செய்யும் எனத் தெரிவித்துள்ளார். அவர்கள் உண்மையாகப் பரிசீலிப்பார்களோ, இல்லையோ என்பது நமக்கு தெரியாது. ஆனால், அந்தக் கட்சியின் படுதோல்விக்கான காரணங்களை நாம் ஆராய்வோம். சுருங்கிவரும் கட்சி இந்தியாவிலேயே ஒப்பீட்டளவில் பெரிய இடதுசாரிக் கட்சியாகவும் ஓரளவுக்கு வசதிகளை, குறிப்பாகக் கட்டமைப்பு வசதிகளையும் அறிவாளிகளையும் கொண்டதாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. சிபிஐயிலிருந்த அரசியல் தத்துவார்த்த நிலைப்பாடுகளில் வேறுபட்டு 1964இல் பிரிந்த சிபிஎம் இதுவரை இப்படிப்பட்ட படுதோல்வியைச் சந்தித்ததில்லை. 1977லிருந்து 2011 வரை ஏறத்தாழ 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆட்...
மனநலமும் முதலாளியமும்! 90களுக்கு முந்தைய உலகம் போன்று இப்போது இல்லை. இன்றைய உலகம் மிகவும் போட்டி மிகுந்ததாகவும், கடுமையான நெருக்கடிகளைக் கொண்டதாகவும் மாறியுள்ளது. அன்றைய உலகத்தில் இருப்பதைக் கொண்டு நிறைவடைபவர்களாக நமது தந்தையரும் முன்னோரும் வாழ்ந்தனர். அடைய முடியாத இலக்குகள் அவர்களுக்கு ஏதுமில்லை. பேராசைகளும் இல்லை. அதனால் ஒப்பீட்டளவில் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில் அமைதி நிலவியது. ஆடம்பர வாழ்க்கை உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் அனைவரும் பணம் ஈட்டுவதற்கான கடுமையான போட்டியாளர்களாகவும் மாறினர். புதிய நுகர்வுப் பொருட்களை வாங்கிக் குவிக்கும் ஆசைகள் ஆக்கிரமித்தன. அடைய முடியாத இலக்குகளை வைத்துக்கொண்டு பொருள் தேடும் அவசர வாழ்க்கையைக் கைக்கொண்டார்கள். எதிர்காலம் குறித்த கனவுகள், மாபெரும் எதிர்ப்பார்ப்புகள், அதே சமயத்தில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவே போராட வேண்டியுள்ள வாழ்க்கை ஆகியவற்றில் ஏற்படும் முரண்பாடுகள் ஏராளமான மனச்சிக்கல்களையும் உளவியல் வதைகளையும் உருவாக்கியுள்ளன. சாதாரண பதற்றத்தில் தொடங்கி பெரிய மன நோய்களான மனச்சிதைவு (schizophrenia), ஆளுமைச் சிதைவு நோய்கள்...
மனநல மருத்துவம் தனியார்மயமாகிறதா? தேர்தல் நடந்துவரும் வேளையில் அந்தப் பரபரப்பைப் பயன்படுத்திக்கொண்டு சத்தமில்லாமல் மனநல மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முன் தயாரிப்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தேர்தல் முடியும் வரை வெளியிட முடியாது என மறுத்துள்ளது தமிழக அரசு. அதையும் மீறிக் கசிந்துள்ள செய்திகளில், ஹான்ஸ் பவுண்டேஷன், பேனியன் என்ற தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழக அரசுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளனர் என்பது வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அரசு மனநல மருத்துவமனையில் நீண்டகாலமாக தங்கி சிகிச்சை பெறும் மனநோயாளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். ஹாஃப்வே ஹோம்ஸ் மனநல மருத்துவமனைகளில் பல ஆண்டுகளாகத் தங்கி குணமாகியிருந்தாலும், அல்லது ஆகாவிட்டாலும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாமல் கைவிடப்பட்ட நோயாளிகள் இருப்பார்கள். இவர்களைச் சமூகத்துடன் இணைக்கும் பாலமாக வீட்டைப் போன்ற சூழலுடன் உள்ள ஹாஃப் வே இல்லங்களை (halfway homes) உருவாக்கி அவற்றில் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதுண்டு. வெளி நா...